அதிகபட்ச ஆசை

அந்த சந்தர்ப்பம்..
அதுவரை..
அவனுக்குக் கிட்டியதில்லை...

அந்த நட்சத்திர விடுதியின்
அருகில் கூட
அவன் சென்றதேயில்லை...

அமைந்ததொரு வாய்ப்பு
அமைச்சரின்
அதிகாரபோக்கை கண்டித்து...
அவரின் எதிரிகளின்
அதிரடி முற்றுகை..

அமைதியாய்..
ஆரம்பித்து..
அடக்குமுறையில் முடிந்தது.

அவனின்
ஆதி ஆசை
அவதாரமெடுத்தது...

அறைகண்ணாடிகளை
அடுத்தடுத்து உடைக்க
ஆரம்பித்தான்..
ஆனந்தத்தொடும்...
ஆவேசத்தோடும்...

அதிக நேர
அவகாசம் இல்லை
அடங்கியது
அவனின் ஆசை...

அமைதியாய்
அகன்றான்
அவ்விடத்தை விட்டு...

அவனின் குடிசையோடு
அவனையும் வெளியேற்றிவிட்டு...
அவ்விடம்
அடுக்குமாடிகளாக
அவதாரமெடுத்ததை
அசைப்போட்டுக் கொண்டே...

அவனின்
அதிகபட்ச எதிர்ப்பு
அது மட்டுமே...

அதற்குமேல்..
அவனால்..
அணுவும்..
அசைக்கமுடியாது என்பது..
அவனுடைய
அசைக்கமுடியாத நம்பிக்கை...

******************
சிகுவரா
மே 2005

எழுதியவர் : சிகுவரா (30-May-17, 10:22 pm)
பார்வை : 186

மேலே