கல்வீச்சு
கல்வீச்சு..!
==========
சிறார்கள் பயிலும் பள்ளி யினருகேதான்
-----சிற்றறிவை மழுங்கச் செய்யும் மதுக்கடையாம்
சீறியெழும் சேலைகட்டிய மாந்தர்க ளங்கே
-----சிறு கூட்டமாய் வெகுண்டெழுந்து ஓடியதைச்
சின்னா பின்ன மாக்கினர் சாராயக்கடையெலாம்
-----சரக்குகள் எல்லாம் சட்டென உடைகிறது
சடுதியில் கல்வீச்சால் அழிந்தது மதுபாட்டிலெலாம்.!
இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டமதை
-----எதிர்த்து இறக்கைகட்டிக் குதித்தனர் களத்தில்பலர்
அரசாங்கத் துக்தெதிராக போர்க்கொடி யேந்தி
-----அருகருகே அமைதியாய்ச் சென்றதொரு கூட்டம்
இருவேறு கும்பலாலெழுந்த பெருஞ் சர்ச்சையால்
-----ஒருவருக் கொருவர் பகையாயினர் முடிவில்
ஊர்வல மனைத்தும் கலைந்தது கல்வீச்சால்.!
கோரிக்கை பல வலியுறுத்தியிள மாணவர்பலர்
-----போராட்டத்தில் இறங்கின ரதைத் கலைக்கவல்ல
பாதுகாப்புப் படையின ரவரிடம் வாலாட்டினர்
-----கண்ணீர்புகை குண்டுகள் அங்கே வலுவிழந்தன
துப்பாக்கிக் காரருக்கு நன்றாகத் தெரியும்
-----தோட்டாவை விடகருங் கல்லுக்குபல மதிகமென்று
கல்வீச்சு கண்டு காததூரமோடினர் காவலர்பலர்..!
மருத்துவம் பொறியியல் அறிவியல் யென
-----மண்டிக்கிடக்கும் கல்லூரியில் படித்துவிட்டு
மனிதநேய எழுச்சியுடன் நியாயம் கேட்டு
-----மரினாவில் கூடிநின்று கோஷம் போட்டனர்
மறியல்செய்ய மணலில் நுழைந்த மாணவனின்
-----மகத்துவம் அறியா தடித்தது காவல்துறை
முடிவில் கூட்டம் கலைய கல்வீச்சே உபயம்.!
படிக்கும் பருவத்தை பாழ்படுத்த வரும்
-----பலயிடை யூறுயதைப் புரிந்து கொண்டுநீயும்
பக்குவமாய் கோஷம்தவிர்!…வேஷம் வேண்டா.!
-----பாரைஉயர்த்திட நீநன்கு படித்திடல் வேண்டும்
பாருலகைக் காக்க ஒழுக்கமிகப் பழகப்பா
-----கல்வீச்சு வேண்டாம் தம்பியினி புதியதொரு
சொல்வீச்சால் புரட்சிசெய்ய முயற்சி செய்..!
============================================
தினமணி கவிதைமணி தந்த தலைப்பு:: “கல்வீச்சு”
நன்றி தினமணி கவிதைமணி வெளியீடு::29-05-17
நன்றி படஉதவி:: கூகிள் இமேஜ்