கோலம்

வாசலிலே
தண்ணி தெளிக்கிறாய்
என்
வாலிபத்தில்
புள்ளி வைக்கிறாய்
சிக்கலான
கோலமொன்றை
சிக்கில்லாமல் போடுகிறாய்
அதில்
என்னை
சிக்கவைத்தே
மெல்லச் சிரிக்கிறாய்!!!

எழுதியவர் : சௌமியாசுரேஷ் (1-Jun-17, 10:32 am)
சேர்த்தது : சுரேஷ்குமார்
Tanglish : kolam
பார்வை : 128

மேலே