சொல்..... மனமே....சொல்.....
மனதில் சிறகடித்து பறந்த பட்டாம் பூச்சியை....
சிறை பிடித்தது யார்?
தினமும் கமழும் வாச மலரை.......
வாட்டிஎடுத்தது யார்?
சிட்டாய் திரிந்த உன் கால்களை.......
தனிமையில் திரிய வைத்தது யார்?
வான பறவையாய் இருந்த உன் பேச்சை......
கூண்டுக்குள்அடைத்தது யார்?
உன்னை மறுபடியும் தனிமை என்னும்
பாதாளத்தில் தள்ளியது யார்?
சொல் மனமே சொல்....