கல்லூரி நண்பர்களின் பிரிவு..........
ஊமையாய் அழுத என்னை......
உள்ளத்தால் நெகிழ வைத்த என் நட்பே....
காலங்கள் கடந்து சென்றாலும்........
திசைகள் திசை மாறினாலும்........
என்றென்றும் என்னுடனே இணைந்திருக்கும்....
என் அழகிய நிழலே...
திக்கி திரிந்த என்னை......
தித்திக்க வைத்த நட்பே...
தனிமையின் குணம் என்னவென்று தெரியாமல்....
இனிமையை அனுபவித்தோமே....
கல்லிலும் கண்ணீர் கசிய.....
கண்டோமே நாம் பிரிகையில்....
கைகோர்த்து தோள்சாய்ந்து நடந்த நாட்கள்........
இனி என்று வரும் என் நட்பே....
தாயின் கருவறையில் பிறந்த நாம்......
நட்பென்னும் கருவறையில்....
என்றென்றும் இணைந்திருப்போம்....
நண்பர்களாக......