புதுக்கவிதை
தீயின் மேலே பூ ஒன்று --- புதுக்கவிதை
தீயின் மேலே பூ ஒன்று
தீபமாய் எரியுது சாட்சியாக .
மாயங்கள் செய்திடும் பூவையிவள்
தீக்குள் விரலை வைத்தால் சுடுவாளோ !
கருகிடும் வாழ்வில் பிறந்தவர் இறப்பதும்
பூமியில் பிறப்பதும் துறந்தவர் துயில்வதும்
துன்பத்தில் ஆழ்வதும் மறந்தவர் ரணங்கள்
மாறிட நினைப்பதும் சிறந்தவர் அவரென
சிந்தையில் கொள்வதும் தீயின் மேல் பூவே !!!
உறவுகள் சூழ்ந்திட உயிர்தனை விடுவதும்
வரமென வாழ்வினில் வந்திடும் நாள்வரை
கரந்தனைப் பிடித்துக் காப்பதும் நம்கடன் !!
சிரமங்கள் நோக்காச் சீர்பெறும் உலகில்
மரணங்கள் கண்டு நாம் மறுப்பின்றி ஏற்போம் !
இயற்கையின் வழிதனில் இயல்பாய் பயணித்தல்
தீயின் மேலே பூ வாகி ஒளிர்வோம் எந்நாளும் !!!
ஆக்கம் :- பைந்தமிழ்ப் பாமணி . சரஸ்வதி பாஸ்கரன்