நீதிபதி
======
சட்டம் சரியில்லை என்று
சட்டம் செய்வது
சட்டத்திற்கு மாறானதென
சட்டம் செய்தவரை,
சட்டம் செய்தது சரியில்லை என்று
சட்டம் செய்யும் சட்டம்
சட்டத்தில் இல்லை என்று
சட்டப்படி தீர்ப்பு வழங்கும்
சட்டத்தின் காவலரே
சனநாயகத்தின் நீதிபதி.
*********************
மெய்யன் நடராஜ்
=====================