உயிர்ப்பு
நண்பர்கள் ,என்னுடன்
படித்தவர்கள்
என அனைவரும்
உட்காந்திருக்கின்றோம்
அவரவர் இடத்தில், ஓய்வு நேரத்தில்
இளைப்பாரும் இடத்தில்,
வகுப்பறை மட்டும்
பூட்டி இருக்கின்றது.
எல்லாரும் எல்லா
இடத்திலும் எண்ணிலடங்கா
புகைப்படம் எடுத்துக்கொண்ட
போதிலும்,
கல்லூரி நடக்கும்
அந்த உயிர்ப்பு
இல்லாத போதுதான் புரிந்தது.
கல்லூரி என்பது
இடம் மட்டும் அல்ல,
மனிதர்கள் சந்திப்பது
மட்டும் அல்ல,
ஆசிரியர்கள் கற்பிப்பது
மட்டும் அல்ல,
நண்பர்கள் பேசிக்கொள்வது
மட்டும் அல்ல,
தேர்வுக்கு ஆயத்தமாகும்
இடம் மட்டும் அல்ல,
மைதானத்தில் விளையாட இடம்
கொடுக்கும் நிறுவனம்
மட்டும் அல்ல,
ஒரு நிறுவனம்
மட்டும் அல்ல,
அதையும் தாண்டி
ஒவ்வொருவருக்கும்
ஒன்றை கொடுத்திருக்கின்றது.
அது வாழ்க்கையாக, அது வலியாக,
அது விரக்தியாக,அது மகிழ்ச்சியாக,
அது கோபமாக,அது அனுபவமாக,
அது மதிப்பெண்ணாக,அது ஏமாற்றமாக
இருக்கலாம்.
எல்லோரிடமும் சிரிப்பு கலந்த
ஒரு இனம் புரியாத சோகம்.