சுடுகாடாய் மாறும் என் தமிழகம் 555
தமிழகம்...
குடிப்பதற்கு குடிநீர் இல்லை
அடுப்பெரிக்க காய்ந்த விறகில்லை...
ஆயிரம் அடி
பூமிக்கடியில் எரிவாயு திட்டம்...
மணல் கொள்ளையன்
முதன்மை மந்திரி...
உலகம் சுற்றும் கிழவன்
பிரதான மந்திரி...
ஒருவேளை உணவிற்காக நான்
வைத்திருந்தது கையகலம் நிலம்...
ராட்சத குழாய்கள்
என் நிலத்தில் இறங்கியது...
பொறுப்பில்லாத தலைவனை
தேர்ந்தெடுத்தது என் தவறுதான்...
என் உரிமையை
கேட்க போனேன்...
காட்டு மிராண்டிகள் காக்கி உடுப்பில்
கைதுசெய்து அடித்தனர்...
தன் இனம் காக்க
குரல்கொடுத்தான் சகோதரன்...
குண்டர்களை சுதந்திரமாக
நாட்டில் சுற்றவிட்டு...
குண்டர் சட்டமாம்
கைது செய்தான்...
இன்றுமுதல் பேருந்து
வசதி எனக்கில்லை...
என் கிராமத்திற்கு வந்தால்
சோதனைகள் பல எல்லையில்...
பறிபோனது
என் சுதந்திரம்...
மண்ணை தொட போகுது
என் பொருளாதாரம்...
பணத்துக்கும் பதவிக்கும்
அடித்துக்கொள்கிறது ஒரு கூட்டம்...
தலைநகரில்...
சோற்றுக்கே போராட்டம்
கிராமத்தில் விவசாயி கூட்டம்...
இனியாவது நாம்
திருந்த வேண்டும்...
நல்ல தலைவனை தேர்ந்தெடுக்க.....