புனைப் பெயர்
புனைப் பெயர்
கற்பனையாளன் தானே
தனுக்கு சூடிகொண்ட மணிமகுடம்
பரிசும் பாராட்டுகளும் புகழும்
பூங்கொத்தும் பொன்னாடையும் பொற்கிழியும்
காகிதத்தில் சுருட்டி கொடுத்த சான்றிதழும்
பினனால் வந்து சேரும் மயில் இறகுகள்
மற்றவைகள் வந்தாலும் வராவிட்டாலும்
மகுடம்
அசையாது ஆடாது
எழுதுகோல் கொண்டு
இதயமெல்லாம் கோலோச்சும்
----கவின் சாரலன்