உனக்காய் பிறந்தது
ஒவொரு படைப்பும்
படைக்கப்படுகின்றன
ஏதோ அர்த்தங்களுக்காக ...
என் படைப்பும்
அப்படித்தான் இருக்கும் என
படைக்கிறேன் என்றாவது
நீ படிப்பாய் என...
எத்தனை முறை
மறக்க நினைத்தாலும்
மறுமுறையும்
நீயே நினைவில்..
ஏக்கங்கள் என்னுள்
ஏராளம்
ஒவொன்றும்
செய்கின்றன எனை
செய்கிறன ஏளனம் ..
சாதிக்க பிறந்தவன் என்றும்
எப்போதும் என்னை
ஏற்றி விட்டாயே ..
இப்பொது உன்னை மாற்றி கொண்டது ஏனோ..
விடியலில் தான் ஆரம்பிக்கறது
அனைத்து உயிர்களின் வாழ்க்கையும்
என விடியலாய் உன் வருகை எப்போதோ..
வரம் என ஏதும் கேட்டால்
நீயே வேண்டும் என்பாய்
இன்று நீ வரவே வேண்டாம்
என்பதும் நீதானோ ...
இறைவா இன்னொரு பிறவி கொடு..
எனக்காய் படைக்க பட்ட அவளிடம்
என்னுயிர் சேர ...