இத பாக்கவாவது மேல இருந்து கீழ வாங்க அப்பா
மொத்தமாய் முழுமையை அழுது விடத்தான் நினைக்கிறன்
என் அப்பன் ஏன் இல்லை என்று ,....
உங்கள் நினைவுகள் இன்றுமட்டும்
கொழுந்துவிட்டு எரிய வில்லை .....
அதிக சத்ததுடன் அழகாய் கடக்கும் வண்டியில்
அவ்வப்போது நாம் நடந்த அந்த தெருஓர பூங்காவில்
நெற்றி பட்டையை ஏதோ ஒரு நெற்றியில் காணுகையில்
சிக்கனம் பார்த்தும் என் சிணுகைக்கு வாங்கி குவித்ததில்
வேக முள் அது 25 ஐ தொடுகையில்
தோட்ட செடி அதில் புதிய பூ பூக்கையில்
கை சட்டையில் கழட்ட முடியா பட்டனில்
மாட்டியுள்ள சட்டையில் உன் வியர்வை இல்லாமல் இருக்கையில்
வண்டி ஏற்ற வாசலை திறக்கையில்
என் பிள்ளை அது என்னை உதைக்கையில் ..................
அடுக்கிக்கொண்டே செல்லுகிறேன் உன் அத்தனை நினைவுகளையும்
நீங்கள் மண்ணில் இருந்து பிரிந்து பலநாட்கள் ஆகியும்
தினமும் எட்டி பார்க்குது இந்த கண்ணில் ஈரம் அது ..............................
அப்பா pls அப்பா இது உங்களுக்காக உங்க பொண்ணு நா எழுதுனது
இத பாக்கவாவது மேல இருந்து கீழ வாங்க அப்பா ...