திருமணம்

ஆகாய கங்கை
மணக்கும் மங்கள மாலை
இனிக்கும் குங்கும வேளை
சிரிக்கும் முத்துக்கள் நேரம்
ரசிக்கும் மத்தளநாதத் தாளம்
எங்கும் அன்பெனும் வாசம்
அதிலே டும் டும் கெட்டி மேளம்


மன்னவன் கைபிடித்து
தந்தை தாரை வார்க்க
நிமிர்ந்தே என்னை கண்டேன் உந்தன் கண்ணில் ...

இந்நொடி சொல்கிறேன்...
என்னொடியும் உன்கரம் பற்றி உன்னுடனே இருப்பேன் .....

பெண்மையின் மையை எடுத்து இட்டுத் தான் கொண்டேன் ...
ஆண்மையில் என்னை அழைத்து அள்ளித் தான் கொண்டாய் ...

உந்தன் மார்போடு நானிருப்பேன் நாதா...
உந்தன் மடியில் நான் கிடப்பேன் உயிரே ...

முதுமையில் இருவருக்கும் ஊன்றுகோல் தேவை இல்லை ...
ஒருவருக்கு இன்னொருவர் பக்க துணை என்றைக்கும் ...

இறப்பும் கூட இவர்களிடம் ஏமாந்து தான் போகும் ...
பிறந்ததென்னவோ வேறு வேறு நேரத்தில் ...
வாழ்ந்ததென்னவோ வேறு வேறு இடத்தில் ...
கலந்ததென்னவோ ஒரே நேரத்தில் அவர்களின் திருமணத்தில் ...
பார்வைகள் மோதிக்கொள்ள ...பெற்றோர் ...உற்றார் உறவினர் முன்னிலையில் ...
அன்றிலிருந்து இன்று வரை அவர்களின் கரம் பற்றியே இருக்கிறது ...

இறந்ததென்னவோ அதே ஒரே நேரத்தில் ...
ஆம் ஓர் அழகான நேரம்...
உறக்கத்திலேயே ஒருவரோடு ஒருவர் மார்போடு அணைத்தபடி இறந்திருந்தனர் ...

புதைகுழி கூட அவர்களுக்கு வேறு இல்லை
ஒன்று தான் ...
அவர்களின் ஆசை படியே ,,,,,

அவர்களின் அன்பு வளர்ந்து கொண்டே இருக்கும்

~~~~~ சுபம் ~~~~~

~ உங்கள் மனைவி பிரபாவதி வீரமுத்து

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (19-Jun-17, 5:01 pm)
Tanglish : thirumanam
பார்வை : 167

மேலே