என் வாழ்க்கையின் வலிகள் -சகி
வாழ்க்கை .....
விலகி விலகித்தானே
சென்றேன் உன் காதலிடமிருந்து ....
என் வாழ்வில் நீயில்லையெனில்
மரணம் மட்டுமே
என்னுறவு என்றாய்....
உன் நண்பர்களிடமும்
இச்செய்தியை தானே
தூதுவிட்டாய் உன் காதலாக ....
உன் காதல்வார்த்தைகளை
நிஜமென்று என்னிதயம்
நம்பியது தவறென்று
உணர்த்திச்சென்றாய் .....
சொல்லாமலே என்
காதலுக்கு விடைக்கொடுத்தாய்........
எத்தனை வலிகளை
இப்பொது என்மனம்
சுமக்கின்றது என்பதை
நீ அறிய வாய்ப்பில்லை .....
புரிதலான வாழ்க்கை
என்று எண்ணி இப்போது
நான் சந்தேகவார்த்தைகளின்
தீயில் கருகி
சாம்பலாகிகொண்டிருக்கிறேன்
நிச்சயம் நீ
அதை அறிய வாய்ப்பில்லை ....
நான் யோக்கியமில்லாதவளென்று
அவன் கூறும் வார்த்தைகளிலும்
உன்னுடன் முடிந்த
உறவை சொல்லிக்கட்டி
கூறும் வார்த்தைகளிலும்
நிச்சயம் நான்
அக்கணம் பிணம் தான் ......
மரணம் என்னை
அழைத்துச்செல்லாத
என்று ஏங்குவேன் .....
எதுவும் மறுத்தால் மறைத்தால்
தானே தவறு ம்ம்ம்ம் .....
சொல்லியபிறகும் அதற்கான
கடுச்சொற்கள் மனதை காயப்படுத்தும் தருணங்களில்
தான் மனம் மரணத்தை
தேடுகிறது ......
தனிமையில் வலிகளுடன்
என் வாழ்க்கைப்பயணம்
தொடரும் இனி????.....