புதுக்கவிதை
ஐம்புலனில் நீரில்லா அவலமே --- புதுக்கவிதை
கம்பர் சிறப்பு சான்றிதழ் போட்டியாளர்
தண்ணீர் இல்லா உலகு தன்னில்
தாகம் தீர்க்க வருவாய் என்று
எண்ணிப் பார்த்து ஏங்கிடும் பொழுதினில்
எமக்காய் நீயும் மண்ணை நோக்கி
வந்திடும் நாளை வருக எனவே
வரமாய் நினைத்து வணங்கி நின்று
பொய்த்துப் போன வானம் பார்த்துப்
பொழிவாய் என்றும் மண்ணில் என்று
எங்கள் கண்ணில் நீரினைப் பெருக்கி
எழில்சூழ் கடலில் சுனாமி யாகி
தாயாய் நீயும் காப்பாய் என்று
தாரணி மீதில் எண்ணி நின்று
உயிராய் உணர்வாய் உலகில் இருந்து
உலக நதிகளின் ஊற்றாய் மாறி
கண்கள் சொரியும் கண்ணீர் மாற்றக்
கருணை மழையே பொழிவாய் நீயே ..!!!
ஐம்புலனில் நீரில்லா அவலம் தான் .
நீரின்றி உலகில்லை நிலையாகிப் போக
வானமோ பொய்த்திடவே வறுமை சூழ
வேளாண்மை இல்லை விளைநிலம் இல்லை
காணும் இடமெல்லாம் கட்டிடங்கள் ஆட்சிசெய்ய
வீணே போகின்றோம் வியாபார உலகினிலே !!!!
ஆக்கம் :- பைந்தமிழ்ப் பாமணி . சரஸ்வதி பாஸ்கரன்