நேரம் சாகுமா

மாண்டு போகுமா - நேரம்
மாண்டு போகுமா ?

ஆண்டு வாரம் கிழமை தேதி
. அழிந்து போகுமா ? - இல்லை
மீண்டு மீண்டு வந்து நம்மை
. மிரள வைக்குமா ?

இறந்தகாலம் என்பதென்ன
. இழந்த காலமா ? - தலை
சிறந்த காலம் இழந்து விட்ட
. சிரம மாகுமா ?

நேரம் காலம் நடந்து போகும்
. நேர்த்தி யானது - கொஞ்சம்
தூரம் போக ஓட்டம் கொள்ளும்
. தோற்றம் கொண்டது !

அற்பப் போதில் நேரம் கூட
. அழிவு கண்டிடும் - அதில்
சொற்ப தங்கள் கவிதை யாகி
. சொர்க்கம் வென்றிடும் !

-விவேக்பாரதி

எழுதியவர் : விவேக்பாரதி (20-Jun-17, 9:41 am)
பார்வை : 68

மேலே