இன்னும் ஓர் இரவு -குயிலி
![](https://eluthu.com/images/loading.gif)
இன்னும் ஓர் இரவு-குயிலி
பிரிவின் வலியில்
பிதற்றிய வார்த்தைகள்
கண்ணீர் சொறிந்து
கவிதைகள் ஆக
வர்ணம்தீட்டா ஓவியத்தில்
கருப்பும் வெள்ளையும்
இறுகப் பற்றி
கவியமென திரிய
சப்தம் அடக்கிய
அழுகையில்
வீரிட்டு எழுந்த
விம்மல்கள் அகல
கசங்காத படுக்கை
விரிப்புகளில்
காற்று வெற்றிடம்
நிரப்ப
என்ன சொல்லி
அழுவேன்
உன் அருகாமைக்கு
ஏங்கி
எனக்கான பாதையில்
உன் உனக்காண
பயணங்கள்
என்ன சொல்ல
விழைந்திருக்கும்.?
சொல்ல எதுவுமில்லையென
சொல்வதெல்லாம்
சொல்ல சொல்ல
தீராது
நேற்று வயதுவந்த
பௌர்ணமி
இன்று சற்று
தேய்ந்திருந்தது
நேற்றைய இரவே
உன் நினைவுகளின்
நெருக்கத்திலிருந்து
என்னை
விடுவிக்காதபோது
இன்னும் ஓர்
இரவை நான்
எதிர்கொள்வது
எங்கனம்..?