இதழகல் வெண்பாக்கள்
என்னோடு கலந்து விடு ---- இதழகல் இன்னிசை வெண்பாக்கள் -- ( உதடு ஒட்டாத வெண்பாக்கள் )
ஆட்சியினால் கண்டலர்ந்தே அன்றிலென நான்கண்டக்
காட்சியினால் கற்கண்டாய் கண்ணேநீ நின்றாயே
சாட்சியினால் நீயென்னைச் சான்றாகக் காட்டிநின்றாய் .
நீட்சியினால் நெஞ்சத்தில் நீ .
நீயழகின் தேனிசையே நீண்டகால நேரிழையே
தீயழகில் தீர்க்கின்றாய்த் தீயாகக் காதலிலே
ஆயிரந்தான் காட்சியினா லாயிரங்கள் செய்கின்றாய்த்
தாயாகி தாலாட்டி தான் .
தானேதான் கார்காலத் தண்ணழிலே காதலிலே
நானேதான் நீதானே நர்த்தனங்கள் நாட்டினிலே
கார்காலக் கண்ணேநான் காண்கின்றேன் சீரெழிலை
நேர்கால நேசத்தால் நேர் .
தேனிசைக் கேட்டதால் தென்றலின் காற்றில்நான்
கானிசைக் கேட்டதால் கானகத்தில் நிற்கின்றேன் .
நேரினில் காணாத நேயத்தில் கண்ணேயான்
காரினில் கண்டலர்ந்த கண் .
ஆக்கம் :- பைந்தமிழ்ப் பாமணி . சரஸ்வதி பாஸ்கரன்