போதையின் பாதை
ஆரத் தழுவிட
மனைவி உண்டு
வாரி அனைத்திடப்
பிள்ளைகள் உண்டு
கனவன் என்ற
கடமை உண்டு
தகப்பன் என்ற
பொறுப்பும் உண்டு
இருந்தும் நான்
என்ன செய்ய
மது என்னும்
மாதை தழுவிகொண்டேன்
மற்றதை எல்லாம்
மறந்துப் போனேன்
மனைவியின் கண்ணீர்
என்னை கரைக்கவில்லை
பிள்ளைகளின் கதறல்
எனக்குள் தைக்கவில்லை
காட்சிப் பொருளாக
என் குடும்பம்
கேளிப் பார்வை
பரிதாபப் பார்வை
இவை யாவற்றையும்
தாங்கிக் கொண்டு
தேவைகள் துரத்த
வாழ்க்கையின் பின்னால்
நிராதவராக அவர்கள்
பரிதவிக்கும் பரிதவிப்பை
கருத்தில் கொள்ளாமல்
சுயநலத்தோடு நான்
என் நினைவாகவே
அவர்கள் துயரத்தோடு.
#sof #சேகர்