முதுமைக்குத் தோள்கொடுப்போம்
திடீர் கவிதை --- முதுமைக்குத் தோள்கொடுப்போம்
நரைவிழுந்த முதுமையினை நலம்கேட்க யாருமில்லை
விரைந்துவந்து பார்த்திடவும் விடிவெள்ளி மனிதமில்லை .
கரைபுரள மனத்தினிலே கடுகளவும் தெம்புமில்லை
அரைகுறையாய் இருப்பதுவே அவளினுடை நிலையாமை !
முதுமையினைப் போற்றியுமே முற்றிலுமாய்க் காத்திடுங்கள்
அதுவன்றோ பிறப்பினுடை அன்பினையே வெளிப்படுத்தும்
பதுமைகளாய் மூடர்களாய்ப் பகுத்தறிவை மறக்காதீர் .
பொதுவுடைமை கொள்கையினைப் பொறுமையுடன் அறிவீரே !
ஆக்கம் :- பைந்தமிழ்ப் பாமணி . சரஸ்வதி பாஸ்கரன் ( நி . மு . 323 )