அன்புத் தோழியின் ஆசைகள்
தொட்டுப் பேசும் காதல் வேண்டாமாம்!
மனம் விட்டுப் பேசும் அன்பு வேண்டுமாம்!
இருளில் மறைய வேண்டாமாம் அவள் காதல்
பகல் வெளிச்சமாகத் தெரிய வேண்டுமாம்
பாசத்தோடு ஊர் அறிய!
பூங்காவில் "தொடங்கிப் படுக்கையில்" முடிய வேண்டாமாம் அவள் காதல் ஊர்த் தூற்றி!
பாசத்தில் தொடங்கி "பந்தத்தில் முடிய வேண்டுமாம் உறவுகள் போற்றி!
தூக்கில் தொங்க வேண்டாமாம் அவள் காதல்
மஞ்சள் கையிற்றில் தொங்க வேண்டுமாம்!
பெற்றவர்களுக்குத் தெரியாமல் மறைத்து வைக்கக் கூடிய பரிசு வேண்டாமாம்!
அவர்கள் காலைத் தொட்டு வணங்கி ஊர் தந்திடும் கல்யாணப் பரிசு வேண்டுமாம்!
தாலிக்கட்டித் தாரமாக்கும் ஊர் ~அறியும் கல்யாணப் பரிசு போதுமாம்!