மகள்

மகள்

கண்டேனே மகளேயுனை கண்ணாலே !
கொண்டேனே இன்பத்தைக் கோமகள்மேல் !
திண்டாடும் என்னிதயம் திரும்பிவிடு .!
பண்பலவும் பாடிடுவேன் வாராயோ !!!


பெண்களிலே சிறந்தவளே என்னருகில் !
வண்ணமாக வந்திடுவாய் வான்மகளே !
உண்மையினை அறிவாயோ பேதையேநீ !
மண்மீதில் பிறந்துள்ளேன் உனக்காக !!!


கண்களிலே அழைக்கின்றாய் மகளே நீயும் !
விண்ணுலகம் சென்றாலும் காத்திருப்பேன் !
எண்ணமெல்லாம் நீயாகி நிற்கின்றாய் !
வண்ணமலர் சூடிக்கொள் எனதருமை மகளே !


காத்திருக்கும் தேவதையே பாராயோ !
பாத்திரமாய் மாறியுமே நடிக்காதே !
சாத்திரங்கள் வேண்டாமே விளையாடல்
கோத்திரமும் ஏனடியோ குலமகளே !!!


போதுமென்றே நினைப்பதற்கு நீயில்லை
சாதுவாக நில்லாதே சாதிப்பாய் !
மாதுயுனை அன்னை நான் வந்தழைக்க
ஒதிடுவர் மந்திரங்கள் மணநாளில் !!!


ஆக்கம் :- பைந்தமிழ்ப் பாமணி . சரஸ்வதி பாஸ்கரன் ( நி . மு . 323 )

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (30-Jun-17, 4:06 pm)
சேர்த்தது : sarabass
பார்வை : 107

மேலே