காதல் -கங்கைமணி
காதல்…
அறியாமல் பற்றும் நெருப்பு,
தெரியாமல் தொற்றும் நினைப்பு.
காதல்…
கடைந்தால் கிடைக்கும் அமுதம்,
கடைக்கண் காட்டிய அற்புதம்.
காதல்…
காவியம் மறவாத நிகழ்வு .
கருமுகில் மறைத்த நிலவு.
காதல்..
நீருக்குள் எரியும் நெருப்பு ,
நினைவுக்குள் கிடக்கும் தவிப்பு.
காதல்…
மலர முயலும் மலர்,
மலர்ந்த மனதின் துயர்.
காதல்...
கற்பனை வடிக்கும் ரசம்
கன்னியர் கொடுக்கும் விஷம் !
காதல்...
குளத்தில் குதிக்கும் மீன்.
கொம்பில் வடியும் தேன்!
காதல்…
பூமியில் சலிக்காத ஓன்று..,
பூவையில் புரியாத ஓன்று.
காதல்...
ஓவியம் வரையும் தூரிகை.,
ஒப்பனை இல்லா காரிகை.
கடைக்கண் பார்வையில் -
காய்க்கும் கனி . காதல்…
கருவிழி அசைவில் பிடிக்கும் சனி!
கோபுரம் சரியும் நிகழ்வு -காதல்
குப்பையை உயர்த்தும் துணிவு.
நினைவில் கிடக்கும் தேள் -காதல்
நெருப்பில் நனையும் தேன்.
காமம் கலவாத ஓன்று -காதல்
காமத்தில் கலக்கவேண்டிய ஓன்று.
வீரம் தோற்கும் களம்- காதல்....
விண்ணில் பறக்கும் கலன்.
கடவுள் வரைந்த ஓவியம்-காதல்...
கண்ணில் தெரியா காவியம் .
முதுமையில் துளிர்க்கும் வேர் -காதல்
இறந்தும் இருக்கும் உயிர்.
கனிந்த மனதில் ,காதல்...
கணக்கும் உணர்வு.
-கங்கைமணி