தரிசனம்
உன் வீட்டுச்
சுவற்றின் மீது
சாய்ந்து நின்றுகொண்டு
என்னை நீ
காணும் அத்தருணம்
இறந்து பிழைக்கிறேன்.
உன் காதல்
பார்வையை
உள்வாங்கி
உள்வாங்கி
விலக பிடிக்காது
அங்கேயே நிற்க
காரணம் தேடுகிறேன்.
போயென்று கூற
இயலாமலும்
நிற்க சொல்ல
ஏங்கும் உன்
கண்களையும்
நாளையும்
இவ்வேளையே வா
என்று இதழ்கள்
சொல்வதைக்
கேட்டுக்கொண்டு
நகர்கிறேன்
என் மனதை
அங்கேயே நிற்க விட்டு.