முதலிரவு முழுநிரல் - பாகம் 1
மும்மயக்கம் தன்னிலே முதல்மயக்கம் முந்திவர
இம்மயக்கம் எதுவரைக்கும் நீளுமென்று கேள்வியெழ
ஆவல்கொண்டு நானும் அவள்வரக் காத்திருக்க
ஆயிரம் முறையேனும் வாசலைப் பார்த்திருக்க
ஆவல்கொண்டு நானும் அவள்வரக் காத்திருக்க
ஆயிரம் முறையேனும் வாசலைப் பார்த்திருக்க
பாவையின் பூவாசம் நினைவெலாம் பூத்திருக்க
நொடிகளும் யுகமாக நிதானத்தில் நான்தவிக்க
அவசரம் தெரியாமல் நாணம்வந்து வழிமறிக்க
முன்வந்து மௌனமாய் வாளெடுத்து போர்தொடுக்க
நொடிகளும் யுகமாக நிதானத்தில் நான்தவிக்க
அவசரம் தெரியாமல் நாணம்வந்து வழிமறிக்க
முன்வந்து மௌனமாய் வாளெடுத்து போர்தொடுக்க
மென்பட்டு கரங்களிலே பால்கலசம் தானேந்தி
பொன்னிட்ட கன்னத்தில் மதுரமலர்த் தேனேந்தி
பொன்னிட்ட கன்னத்தில் மதுரமலர்த் தேனேந்தி
இடையிட்ட மேகலை இன்பமிகும் கவிபாட
நடையிட்டு அன்னமவள் தனியறை வந்தாள்
நடையிட்டு அன்னமவள் தனியறை வந்தாள்
வாவென்று மனம்சொல்ல தோளோடு தோள்சேரப்
போவென்று ஆசைதுள்ள நாணமே இவ்விடம்
சாவென்று சொல்லியே கனிகண்ட குரங்கேபோல்
தாவென்று தாவிநான் பின்னிருந்து கையணைக்க
தாவென்று தாவிநான் பின்னிருந்து கையணைக்க
நாணத்தின் கரைதொட்டு நதியாக ஓடுகிறாள்
நாளான தவத்திற்கே வரம்வேண்டித் தேடுகிறாள்
ஆளான நாள்தொட்டு எனக்கென்று இருந்தவள்
நானங்கு தனித்திருக்க நாணத்தை கூடுகிறாள்
தகிக்கும் கனலாகி காதல்தீ எனைவாட்ட
கொதிக்கும் மனங்கள் சந்தித்து தணிவதற்கு
விதித்த இரவில் தயக்கமும் வரலாமோ
விலகுவது ஏனோ முறையிது தானோ
கொதிக்கும் மனங்கள் சந்தித்து தணிவதற்கு
விதித்த இரவில் தயக்கமும் வரலாமோ
விலகுவது ஏனோ முறையிது தானோ
பொய்யான கோபத்தை சொல்லிலே தோய்த்து
ஒய்யார மயிலை சோதிக்க நினைத்தேன்
முத்தான கண்ணாலே முகம்பார்த்து சிரித்தாள்
வித்தான சுகத்துக்கு வரும்பாதை விரித்தாள்
ஒய்யார மயிலை சோதிக்க நினைத்தேன்
முத்தான கண்ணாலே முகம்பார்த்து சிரித்தாள்
வித்தான சுகத்துக்கு வரும்பாதை விரித்தாள்
பித்தான நெஞ்சுக்கு பரிசொன்று தரவென்று
அத்தானை சொர்க்கத்தின் வாசல்வர அழைத்தாள்
மெலிந்த நூலிடையின் பாரத்தை குறைப்பதாய்
இடையழகை நானும் இருகையால் அளந்தெடுத்து
அத்தானை சொர்க்கத்தின் வாசல்வர அழைத்தாள்
மெலிந்த நூலிடையின் பாரத்தை குறைப்பதாய்
இடையழகை நானும் இருகையால் அளந்தெடுத்து
முழுக்கலசம் பாலோடு முன்நீட்டிய கரம்பற்றி
முழுதும் தாவென்று மெத்திய வேளையிலே
சத்தமிட்ட வளையகற்றி மூலையில் வீசிவிட்டாள்
சத்தமிட்ட வளையகற்றி மூலையில் வீசிவிட்டாள்
முத்தமிட்ட தருணத்தில் மெய்சிலிர்க்க கூசிவிட்டாள்
தொட்டணைத்த நொடியினில் சட்டென சரிந்தாள்
பட்டணைத்த பாரமென்று கூறிமெல்லக் களைந்தாள்
கள்ளத் தனமாய் பார்த்ததை யெல்லாம்
கள்ளத் தனமாய் பார்த்ததை யெல்லாம்
உள்ளபடி பாரென்று தாராளம் காட்டினாள்
கைவளையும் கால்கொலுசும் பணிநீக்கம் பெற்றதால்
மூடிவைத்த முந்தானை கோபமாய் வெளிநடக்க
மூடிவைத்த முந்தானை கோபமாய் வெளிநடக்க
பழம்நழுவ காத்திருந்த பால்சொம்பு போல்நானும்
நழுவிபோன முந்தானைக்கு மௌனமாய் நன்றிசொல்லி
பலநாள் காத்திருந்த விருந்தின்று வாய்த்ததென
பரவச போதையில் சிறகடித்து நான்பறக்க
வறண்ட நிலம்போல வஞ்சியவள் ஏங்கிக்கிடக்க
திரண்ட கடலாகி நான்அவளை சூழ்ந்திருக்க
கற்றுவந்த காதல் கனிந்துவந்த நேரம்
முற்றிவந்த மோகம் விருந்து பரிமாறும்
முற்றிவந்த மோகம் விருந்து பரிமாறும்
சற்றே தலைசாய சிவந்த இதழோரம்
ரசமான அமுதமாய் கனிந்தசுவை தேனூறும்
மேகங்கள் திரண்டுவர கூத்தாடும் மயில்போல
மோகத்தில் என்நெஞ்சம் அவள்சிந்தும் புன்னகையில்
என்னுயிர் மயக்கும் மாயமெங்கு உள்ளதென்று
ஆராய்ந்து பார்க்கவே ஆவலுற்று தேடுகையில்
என்னுயிர் மயக்கும் மாயமெங்கு உள்ளதென்று
ஆராய்ந்து பார்க்கவே ஆவலுற்று தேடுகையில்