காதல்
உன் நயனங்கள் நளினத்தில்
கண்டு கொண்டேன் நான்
என் காதல் மனுவிற்கு நீ
சம்மதம் தந்துவிட்டாய் என்று
உன்னைத் தொட்டு உறவாட
வேண்டும் என்று நான் உன்
அருகே நெருங்கும் போது நீ
துள்ளி மான் போல் ஓடி
எங்கோ மறைந்து போகிறாய்
மன்னவனே பொறுத்திரு அந்த
காலம் இன்னும் கைக்கூட என்று
சொல்வது போல்;,இன்னும் பொறுத்திரு
என்று நாளையும் நீ சொன்னால் என்னவளே
நான் தென்றலாய் மாறி உன்னைத் தீண்டிட
எண்ணிடுவேன் உன் பார்வைக்கு எட்டாமல்
,