அவளுக்காக

அன்பே....
நீ என்ன ஒப்பனை உன்
முகத்துக்கு செய்கிறாயா
அல்ல
உன் பாதத்துக்கு
செய்கிறாயா
உன் பாதங்கள் இரண்டும்
அப்படியொரு அழகாய் இருக்கே...!
***********************************
உன் விழிகள் இரண்டும்
எந்த கல்லூரியில் எந்த பாடத்தின்
போராசிரியை
இப்படி பேசுகிறது...!
***************************
அன்பே
நீ இசையாகவும்
இனிய குரலாகவும் மாறி
என் காதல் கவிதை வரிகளுக்குள்
புகுந்துக்கொள் மலரட்டும்
அது ஒரு இனிய பாடலாக...
****************************************
கண்ணிவெடியில் தப்பித்து
கண்ணே
உன் கண்துடிப்பில்
சிக்கிக்கொண்டேனடி நான்...
************************************
கடந்த வருடம் காதலர் தினத்தில்
நீ என் இதயத்தில் வாழ்ந்தாய்
இவ்வருடம் உன் நினைவுகள்
வாழ்கின்றன என் இதயத்தில்...
****************************************
உன்னை காதலிப்பதை விட
உன் அகன்ற கண்களை
காதலித்திருக்கலாம்...
என்னுடன் முதலில் பேசியது
உன் கண்கள் மட்டுமே
*********************************
நீ என்னோடு இருந்தால் அது
எனக்கு வசந்தகாலம்
நீ என் கைப்பற்றி நடந்தால் அது
எனக்கு விழாக்கோலம்
நீ என்னைவிட்டு விலகினால்
அன்றே எனக்கு இறுதி ஊர்வலம்...
*********************************
காதலித்து தோற்றுப்போனலும்
பரவாயில்லை வாழ்க்கையில்
ஒருமுறையாவது
காதலித்து பார் உலகம் புரியும்...
************************************
உன்மடியில் நான்
என் மடியில் நீ
உறங்கி உறங்காமல்
பேசிக்கொண்டபோது
இருளுக்கும் காது முளைத்தது..
************************************
தேவன் கோயில் தீபங்கள்
உன் கண்ணில் கண்டேன்
ஸ்ரீதேவி தரிசனத்தை உன்
முகத்தில் கண்டேன்
கவிதை எழுத காகிதமாக
உன் இதழை கண்டேன்
என் கண்களை மூடி உன்னை
என்னுள் கண்டேன்...
***********************************
உன் பிரிவாலே நான் குடித்த
மதுவிலும் மயக்கமில்லை
வெண்மதி நீ என் அருகில் இல்லாததால்
என் மதியில் மயக்கம் கண்டேனடி...
************************************************
இந்த பூலோகம்
தேவலோகமாகிறது
இவள் இங்கே
வாசம் செய்வதால்
பூக்களெல்லாம்
மாநாடு நடத்துகிறது
இவளை தங்களின்
தலைவியாக அங்கீகரிக்க...
*********************************************
எல்லோரும் சந்தனத்தை
உறைத்து பூசினால்
அந்த சந்தனம் இவளை
உறைத்து பூசிக்கொள்கிறது...
********************************************
இதயம் இதயம்
உரசிக்கொண்டால்
அது காதலின் உதயம்
காதலும் காதலும் உரசிக்கொண்டால்
அது புரிதலின் உதயம்
புரிந்த பின்னும்
உரசிக்கொண்டால்
அது பிரிதலின் உதயம்...
******************************************
சின்ன சின்ன
மழைதுளி என்மேல் விழுந்ததடி
உன் நினைவுகளேல்லாம்
அதிலே நனைந்ததடி...
***************************************
என் இதயமெனும் ஏட்டில்
உன் விழிகள் சொன்ன
வரிகளை
புதுகவிதையாக்கினேன்
படித்துபாரடி என் இதயத்தை திறந்து..

எழுதியவர் : செல்வமுத்து.M (1-Jul-17, 6:36 pm)
Tanglish : avalukkaka
பார்வை : 539

மேலே