எது மனிதம்

இன்னொரு மனிதனை அழ வைக்கும் சிரிப்பு கூட வன்மம் தான் ...

உன்னை புரிந்து கொள்ள நீ இருக்கையில்
எதை கண்டு அஞ்சுகிறாய் ...அழுகிறாய் ...

இவர்களுக்கு சரியாக இருக்க வேண்டும் ...
அவர்களுக்கு சரியாக இருக்க வேண்டும் எல்லாம் இல்லை ...
உன் மனதிற்கு சரியாக இருந்தால் போதும் ...

நீ யாருக்கும் நான் நல்லவன் ...
நான் கெட்டவன் என்று சொல்ல வேண்டிய அவசியமில்லை ...
காரணம் நீ யார் என்பதை நீயே அறிவாய் ...

மனிதனை கொல்வது மட்டும் கொலையல்ல ...

மனிதனாக பிறந்தால் மனிதனாக வாழ் ...
உந்தன் நீதி உந்தன் மனமே அறியும் ...

~ பிரபாவதி வீரமுத்து

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (2-Jul-17, 12:07 am)
Tanglish : ethu manitham
பார்வை : 227

மேலே