தமிழ் வாழ்த்து

யார் கேட்டு மழை வந்தது
யார் கேட்டு காற்றடித்தது
நீர் கேட்டீரா? நான் கேட்டேனா?
நிலவுவர மறந்ததுண்டா?
சூரியனை எவனிங்கே
சொன்னான் வரச்சொல்லி.
ஊர்முழுக்க வெளிச்ச
ஒளிபரப்பச் சொன்னதுயார்?

யார்வாழ்த்தி தமிழ்வாழ்ந்தாள்
யான்வாழ்த்தி அவள்வாழ
தேர்பிடித்த வடமானேன்
தேன்பிடித்த குடமானேன்
கூர்பிடித்த வாளானேன்
கொடைகொடுத்தாய் ஆளானேன்
யார்வாழ்த்தி நீவாழ்ந்தாய் தமிழே!
உன்வாழ்த்தில் நாம்வாழ்ந்தோம் தமிழே!

எழுதியவர் : கனவுதாசன் (2-Jul-17, 11:50 am)
சேர்த்தது : கனவுதாசன்
பார்வை : 239

மேலே