நிற பேதங்கள்
மனிதர்களில் பல நிறங்கள்
வெள்ளை,கருப்பு, பழுப்பு
மஞ்சள் என்று ,பறவைகளில்
பல நிறங்கள், விலங்குகளிலும்
பல நிறங்கள்;இத்தனையேன்
அந்த வான வில்லில் நிறங்கள் ஏழு
நீல வானம், கார் மேகம்,இன்னும்
நீல நிற கடல் என்று அந்த
படைத்தவனுக்கு நிறங்கள் மேல்
ஓர் அலாதி ஆசை; இத்தனையேன்
பச்சை கிளியைப் படைத்தவன்
அத்துடன் நில்லாமல் பஞ்ச வர்ண
கிளியையும் படைத்தான் !
இப்படி நிறங்கள் மேல் அவனுக்கு மோகம்
அவனுக்கு நிறம் உண்டா ? இறைவன்
கருப்பா, வெளுப்பா என்றால்
என்னை கேட்டால் ,ஐயா அவனோ
தேஜோமயன், அரூபன்;,ஒளிக்கு
நிறமேது ஆனால் ஒளி பட்டால்
பட்ட பொருளின் நிறம் மாறும்
அந்த படைத்தவன் ஒவ்வொரு
பொருளின் உள்ளேயும் ஒளிந்து
ஒளிர்கின்றான் அது அவன் லீலை!
இதனை நிறங்களை படைத்தவன்
இந்த நிறம் தான் உயர்ந்தது என்று
எந்த வேதத்திலும் சொல்லவில்லை
அப்படி இருக்க மனிதன் ஏன்
நிறத்தின் மாயையில் இன்றும்
இருக்கின்றான் ? இதற்க்கு
யார் பதில் கூறுவார்
நான் அறியேன் பராபரமே !