இயற்கையின் அதிசயம்

இயற்கையின் அதிசயம்


மாறுகின்ற காலநிலை மண்ணுலகின் அதிசயமே !!
தாறுமாறாய் வீசுகின்றத் தடையில்லாப் புயல்காற்று
வீறுகொண்டே எழுகின்ற விண்ணுலகின் வான்மழையும்
வேறுபாடாய்ச் சுட்டெரிக்கும் வெய்யோனின் சீற்றமும்தான் !!இயற்கைதரும் இதமான இன்பங்கள் வேண்டுமன்றோ .
செயற்கைதனைப் பெருக்கினாலே சேர்ந்திடுமே கழிவுகளும் .
மயக்கமான அந்திமாலை மலையோரம் காற்றுவாங்கத்
தயக்கமுமேன் மானிடா தளராதே வாழ்வதற்கு .!!!


ஆக்கம் :- பைந்தமிழ்ப் பாமணி . சரஸ்வதி பாஸ்கரன்


  • எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன்
  • நாள் : 6-Jul-17, 4:31 pm
  • சேர்த்தது : sarabass
  • பார்வை : 1023
Close (X)

0 (0)
  

மேலே