இயற்கை
வானில் விரித்த நீல நிற
பட்டு கம்பளத்தில், தூவி
விடப் பட்ட வெள்ளி முல்லை
மொட்டுக்கள் விரிந்து
சிரிப்பது போல் வானில்
தாரகைகள்; அந்த பூரண
நிலவாம் ராஜனுக்கு
அவன் பவனி வரும்
விண் வெளியில் போடப்பட்ட
மின் மினுக்கும் வான் வெளி
பந்தலோ? இரவில் இந்த
வானம் தான் நமக்கு
காண தரும் விந்தைக்
காட்சிகள் தான் இத்தனையும்;
இன்னும் கூர்ந்து பார்க்க
கிடைக்கும் பார்வைக்கு இன்னும்
எத்தனையோ வினோத காட்சிகள்
மண்ணோடு சேரா விண்ணில்
மாய ஜாலங்கள் இயற்கையின்
வண்ண கோலங்கள் !