பூச்செடிகளில் தானாய் மலர்வதைப்போல்

மலர்ந்த "ரோஜாவை " உனக்கு
பரிசளிப்பதில் மகிழ்வில்லை எனக்கு !
அரும்பாய் மொட்டாய் இருக்கும்
ரோஜாவை தருவதில் தான் மகிழ்ச்சி !
உன் முகம் அருகே வைத்து
ஒரு புன்னகை செய்யும் கணத்தில்
"ரோஜா " மொட்டவிழ்ந்து மலர்ந்து
விடுகிறது !
"பூச்செடிகளில் தானாய் மலர்வதைப்போல் "