நடக்குமா நல்லது

இணையைப் பிரிப்பது இவன்வேலை
ஈவு இரக்கம் இலாமனிதன்,
துணையா யிருக்கும் உறவுகளைத்
துண்டாய் ஆக்குதல் இவன்குணமே,
உணவு தேடி வெளிவந்த
ஒற்றைப் புறாவைப் பிடித்தடைத்தான்,
துணைப்புறா தேடிக் கண்டதிங்கே
தீர்வு நல்லதாய்க் கிடைத்திடுமோ...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (8-Jul-17, 6:47 am)
பார்வை : 100

மேலே