ஆதியும் அந்தமும் - பெண்ணே தொடங்கி பெண்ணே முடிதல்

ஆதியும் அந்தமும் - பெண்ணே ! தொடங்கி பெண்ணே ! முடிதல்



பெண்ணே ! பேசா மடந்தையே !
பெருமை பலவும் பேசும் பொற்சித்திரமே !
மௌனமொழி உனக்கழகா !
மல விழியும் உனக்கழகா !


வண்ணங்கள் அரிதாரம் பூசுகின்றாய் !
வனப்பான முகவழகை மறைப்பதுவும் ஏனோ !
எண்ணங்கள் எந்நாளும் உன்னையே சுற்ற
எம்மருங்கும் நீயாகிக் கொல்கிறாய் தேவி !

உண்மையிலே நீயுந்தான் யாரடி !
உயிரோடு என்னையும் புதைப்பவளோ !
கண்களிலே தெரிகின்ற காட்சியெல்லாம்
கண்ணே ! உன் பெயர் சொல்லுதடி !!

விண்ணுலக மங்கையோ ! விடிவெள்ளி
விந்தையோ ! விரைந்து வருவாயோ என்னருகில் !
பண்கள் பல பாடுகின்றேன் காதலிலே
பருவமகள் என்னிதயம் அறிவாயோ நீ !

உண்ணுதலும் உறங்குதலும் இல்லையடி !
உறங்காத இதயத்தில் உன் நினைவு !
திண்ணமடி ! நீயின்றி நானில்லை !
தித்திக்கும் நறுந்தேனே ! ஞானப் பெண்ணே !!

ஆக்கம் :- பைந்தமிழ்ப் பாமணி . சரஸ்வதி பாஸ்கரன்

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (10-Jul-17, 12:21 am)
சேர்த்தது : sarabass
பார்வை : 182

மேலே