அறிமுகம் வளர்ந்து நட்பு தரும்
அவன் அவனைப் பார்த்தான்
அதுதான் அவர்கள் அறிமுகம் ,
------------------
அறிமுகம் வளர வளர
அவர்களிடையே நேசம் வந்தது
---------
நேசம் முற்றி நட்பாய் மாறியது
--------------
நட்பை உணர்ந்தனர் அவர்கள்,
இப்போது நண்பர்கள்
---------------------
அவர்கள் இனி எப்போதும் நண்பர்களே
அவர்கள் வாழ்வில் நட்பே உயிரோட்டம் .