அப்பா
தேவதை ஒரு புறம்
தெய்வம் ஒரு புறம்
நடுவில் நிற்பது வரம் வரம்
தேவதை விரலும்
தெய்வத்தின் விரலும்
பற்றி நடப்பது சுகம் சுகம்
பிஞ்சு கைகள்
கண்களை மூட
பகலும் இங்கே காணாமல் போகும்
செல்ல கோபம்
செய்திடும் நேரம்
தென்றல் காற்றும்
சிரித்திட்டு போகும்
தேவதை தெய்வம்
பேசிடும் அழகை
பார்த்து கொண்டே
இருந்திட தோணும்
மகளை பெற்ற
தந்தையை பார்த்து
படைத்தவனுக்கும்
பொறாமை கூடும்
தேவதை கருவில்
தெய்வத்தை சுமக்கும்
அழகுக்கிங்கே
விடுமுறை இல்லை
மழலை பாதம்
எட்டி உதைக்க
இன்னொரு மார்பு
என்னிடம் இல்லை
அப்பா என்று
தேவதை அழைத்தால்
மீண்டும் அழைத்திட
கேட்டிட தோன்றும்
விரலை பிடித்து
நடையும் பழக
வீதிகள் எல்லாம்
மேகங்கள் ஆகும்
பள்ளிக்கூடம்
போகும் தருணம்
வீணையை மறந்த
கலைமகள் நிழலாய்
புத்தக பையை
சுமந்திடும் நொடியில்
பாரம் வந்து மனதில் கூடும்
தேவதை கணவனாய்
கடவுளின் தந்தையாய்
வாழும் கர்வம்
தினமும் நீளும்
மீண்டும் ஒருமுறை
பிறவி கிடைத்தால்
அந்த நொடியும்
இதுவே போதும்

