நாஶமுத்துக்குமார்
கண்கள் உறங்கியது
பாடல் ஒலிக்கிறது
என்றும் உன் கவிதை
வாழ்கிறது!
வார்த்தையில்
முனுமுனுப்பு?
தவித்த மீன்களாய்
யாழை மீட்ட
யாழ் கூட
உன்னை தேடுகிறது..
வரிகளில் உன் வலிமை
வார்த்தைகளில் நீ எளிமை
வாழ்நாள் முழுவதிலும்
உன் எழுத்துக்கள்
ஒலித்துகொண்டுதான் இருக்கும்.
நீ பாடலில் பிறந்த முத்து!
குமாரனாகவே மண்ணை விட்டு
பிரிந்தாய்
நான் உன் ரசிகன்
நா.முத்துகுமார் என்றதும்
என் கண்களில் நீர்துளி
உன் கவிதை கடலில்
நீர்துளி கலந்து
கவலை மறக்க நினைத்தேன்
முடியவில்லை
உன் பிறந்தநாள்
வாழ்த்து கூற நீயில்லை
கவிதையில் நீ வாழ்வாய்
உன் கவிதையை படித்து
உன்னை நினைவு
கூறுகிறேன்.
அழகான கவிதை முத்து
மீண்டும் சிப்பிக்குள்!!
உன் கல்லறைக்கு
நீ மாபெரும் கவி விதை
மீண்டும் வா
மறுஜென்மம் தொடர்ந்து
கவி விழிகளில்
கனவுகள்
நீ வருவாய்
என நம்பி!!
உன் தம்பி
புதுவை சிவசக்தி