யானை கண்ணீர்

யானை கண்ணீர்

பாப்பா பாப்பா கோவிலுக்கு போனாயே உனக்காக கடவுளிடம் என்ன வேணுமுன்னு வேண்டிக்கிட்டே" என்று அம்மா தன் மகளிடம் கேட்டாள்

"நான் கோவிலுக்கு போனேன் ஆனால் சாமியை கும்பிடவும் இல்லை எனக்கென எதையும் கொடுவென்று கேட்கவும் இல்லை" என்றாள் மகள்

"பிறகு கோயிலுக்கு எதற்காக போனாய் பாப்பா" என்று தாய் கேட்டாள்

அதற்கு குழந்தை சொன்னது
"கோவில் வாசலில் நின்றிருந்த யானையிடம் வேண்டி கேட்டுப்பார்த்தேன்"

"அப்படி என்ன வேண்டிகேட்டாய்" என்று அம்மா கேட்டாள்

"என் அப்பா காலமாகி வெகுநாளாயிற்று என்தாயும் நானும் மட்டுமே உள்ளோம் என்தாய் கூலி வேலைக்குபோய் சம்பாதித்து வருவாங்க அதுல அரிசிவாங்கிவந்து தரையில கொட்டி கல்லு நெல்லு உமி புழுப்பூச்சி பொருக்கி சிரமப்படுறாங்க அக்கத்து பக்கத்துல முறம் கேட்க ஒருமாதிரி பேசிவிட்டு கொடுப்பாங்க முறம் பிஞ்சிபோச்சி என்றெல்லாம் பேசுவார்கள் அம்மா சம்பாதிப்பது சாப்பாடு க்கே பத்தாமல் ஆகிவிடும்போது எங்களுக்காக முறம் வாங்கி ஆள எப்படி முடியும் அதனால •••••!

"அதனால••••" கேட்டாள் தாய்

"அதனால••••••உனக்கென்ன தானியமா ஒன்னா பொடை க்கக்கொள்ள; இல்ல....... களஞ்சியமா வாரி தூத்த....; முறம் மாதிரி இரண்டு காதுகள வெறுமன வச்சிக்கிட்டு ஆட்டு ஆட்டுன்னு ஆட்டிக் காட்டுறதால உனக்கென்ன பிரயோசனம்; அதை முறம் வாங்க முடியாத எங்கம்மாகிட்ட கொடுத்தா உதவி செஞ்சாமாதிரியும் இருக்கும்; உனக்கு புண்ணியமும் வந்து சேருமுன்னு வேண்டி கேட்டேன்"

"அதுக்கு யானை என்ன பண்ணுச்சி"

"அதனால் வேற என்ன பண்ணமுடியும் என்னைப்பாத்து கண்ணீர் விட்டது••• "

"அம்மா வெளியில யாருக்கோ என்னமோ ஆயிட்டது போல இருக்கு எல்லாரும் கூட்டமா நின்னு வேடிக்கை பாக்குறாங்க வாங்க நாமும் போய் பார்க்கலாம்"

"ஐய்யோ பாவம் கூடை முறம் முச்சில் விக்கிறவம்மா மயக்கம் போட்டு விழுந்து கெடக்கிறாங்க இருமா நான் குடிக்க தண்ணி கொண்டு வாரேன்"

தண்ணீரை குடிக்கவச்சி கையை புடிச்சி பாத்தப்போ தெரியவந்தது அந்த பொண்ணு கர்ப்பமா இருக்கிறது" இதெல்லாம் வரவேண்டிய மயக்கம்தான்"
பாப்பாவின் அம்மா விணவினாள்

"இத்தனபேரும் வேடிக்கத்தான் பாத்தாங்களே தவிர ஒருத்தரும் கிட்டவே வரலங்க உங்க நல்ல மனசுக்கு எல்லாம் நல்லபடியா நடக்கும் ....."

" என்ன பாப்பா என்னத்த தொட்டு தொட்டு பார்க்கிறே வெளையாட முச்சில் வேணுமா...எடுத்துக்கோ....எடுத்துக்கோ.......அட காசு ஒன்னும் வேணாம் சும்மா எடுத்துக்கோமா....."

"இல்ல ஆன்டி எனக்கு முச்சில் வேணாம் முறம் ஒரு ஜோடி கொடுங்க அதுக்கு உண்டான காசை ஒரேதடவ எங்களால கொடுக்கமுடியாது கொஞ்சம் கொஞ்சமாத்தான் கிடைக்கும் அதுக்காக காசு வாங்க நீங்க வர சிரமப்பட வேணாம் உங்க வீடு நான் பள்ளிக்கு போற வழியிலத்தான் இருக்கு எனக்கு தெரியும் காசு கெடைக்கறப்போ மறக்காம••••"

"ஏம்மா முறம் என்ன வெல" ரைஸ்மில்லுகாரர்...!

"ஒரு ஜோடி நூத்து அம்பது ரூபாங்க...."

ஊங்கிட்ட போயி என்னத்த குறைக்கச்சொல்லி கேழ்கிறது; சரி சரி நான் புதுசா ரைஸ்மில்லு தெறந்திருக்கேன் அதலப்போயி ஒரு ஆறு ஜோடிய ரைஸ்மில்லுகாரர் கொடுக்கச்சொன்னார்னு கொடுத்துடு; இந்தா மொத்தம் ஒம்போது நூறு ரூபா.......! " கொடுத்துவிட்டு போய்விட்டார் ரைஸ்மில்லுகாரர்

"சரி பாப்பா நான் கொண்டுவந்தது ஆறு ஜோடிதான் எல்லாத்தையும் ரைஸ்மில்லுகாரர் வாங்கிட்டார் அதனால நீ ஏங்கூடவே வீடுவரைக்கும் வா உனக்கு கொடுத்து விடுறேன் இல்ல ..."

"என் மகள் கையில கொடுத்து அனுப்புறேன் அதுக்காக காசு எதுவும் வேணாம் உங்களுக்காகவும் சேர்த்து எனக்கு கடவுள் கைநிறைய கொடுத்துட்டான் இந்த குட்டி தனலஷ்மி
கையை வெச்சதால என் சரக்கெல்லாம் வித்துப்போச்சி இதுவரைக்கும் இன்னைக்கு விற்ற மாதிரி நான் என்னைக்கும் விற்றதில்லை
இதை கடவுளோட கருணையின்னுதான் சொல்லத்தோணுது"

கடவுள் இந்த குழந்தையோட ஏக்கத்தை புரிந்துகொண்டு அவள் வேண்டுதலை யானைமுகன் கணபதியால் நிறைவேறியது என்றே தோன்றுகிறது

குழந்தையின் ஏக்கமோ தன் அம்மா குறைவாக பிறர் பேசப்பட்டதை அவளால் தாங்கிக்கொள்ள முடியாததின் நோக்கமே இந்த லீலை அரங்கேற்றப்பட்டது என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது.


Close (X)

0 (0)
  

மேலே