உ௫குலைந்த ஓர் உயிர்
![](https://eluthu.com/images/loading.gif)
கண் முன்னே கொடூரனின் கைகள்
உணர்ந்தேன் விலங்கிட்ட என் கைகள்........
பக்கத்திலோ அருவருக்கும் ஒரு மூச்சு
திணறித் துடித்தது என் மூச்சு........
இயற்கை மாதந்தோறும் அளித்த வலிகள்
அனைத்தும் தூசு என்றுணரவைத்த வலி........
கசக்கி பிழியப்பட்ட எச்சமாய் வீதியில்
மானம் இழந்த அச்சம் மதியில்......
நாள்பட்ட வேதனையால் உடலில் ரணம்
பெற்றோரின் துடிப்பை சகியாத மனம்........
என் மானம் களவாண்ட காமனனே
உயிரையும் உரிந்து கொள் இராட்சதனே..........
நீ சூறையாடியது கற்பையென்றா நினைத்தாய்????
அல்லவே-----
என் கனவு
காதல்
சிரிப்பு
வீரம்
என ஒட்டுமொத்த வாழ்வையும் அழித்துவிட்டாய்.......
- இப்படிக்கு உருக்குலைந்த ஒர் உயிர்..............