சிவகாமியின் செல்வன்
ஏழையாய் நம் தமிழகத்தில் பிறந்தார்!
வாழ்நாளை நம் நலனுக்கு ஈந்தார்!
கல்வி சிறிதே தான் கற்றார்!
நல்லறிவு அதிகம் வாய்க்கப் பெற்றார்!
தன்னலம் முழுதும் தான் மறந்தார்!
அன்னைக்கும் சலுகை தர மறுத்தார்!
அண்ணல் வழியில் வழுவாது நடந்தார்!
மண் புகழ தென்னாட்டுகாந்தியாய் வாழ்ந்தார்!
பட்டினியை அகற்றி, பட்டங்கள் பெறவே,
சட்டங்கள் பலவும் திறம்படவே போட்டு,
திட்டங்கள் நிறைவேற்றி - ஏழை மாணவர்
வாட்டம் போக்கிடவே அயராது உழைத்தார்!
ஆலை கட்டி தொழிலையும்,பள்ளி
சாலை கட்டி கல்வியையும், பல
அணைகள் கட்டி உழவையும்,மேம்படுத்தி,
ஏனைமாநிலம் நாணி நிற்கும்படி வைத்தார்!
நேர்மைக்கும், எளிமைக்கும்,
கூர்அறிவிற்கும், பெருந்தன்மைக்கும்,
நிர்வாகத் திறனுக்கும்,கருணைக்கும்,
ஓர் இலக்கணமாய் வாழ்ந்தார்!
கண்டு, கேட்டு, இன்புற்று,
கற்று,நெகிழும் விதத்திலே
கருத்தாய் நல்வாழ்வு வாழ்ந்து
கவின் மிகு இலக்கியமுமானார்!
மாட்சி பெற்ற தலைவனுக்கு
சூட்டிச் சூட்டி மகிழ்கின்றோம்
இன்றும் நாம் புகழாரம்!
நாட்டில் வரும் தேர்தலிலே
வோட்டளிக்கும் வேளையிலே
தவறாது கர்மவீரர் நினைந்தால்
தமிழகத்திற்கு இனி நேராது சேதாரம் !