தேன் வாகையும் அவள் விழிகளும்

தேன் வாகையும் வாய் பேசுமா?
உன் விழிகளும் பொய் ஆகுமா??
பெண் இமைகளும் எழில் சேர்க்கவே மைத்துளிகளாய் உரு மாறவா???
என் கைகள் உளியாய் மாறும்,
மலை சிலையாய் மாறக் கூடும்.
எனை பார்க்க மறுக்கும் உன்விழி ஒருநாள் எனை பார்த்து மலரக் கூடும்.
(தேன் வாகையும் வாய் பேசுமா?
உன் விழிகளும் பொய் ஆகுமா?
பெண் இமைகளும் எழில் சேர்க்கவே மைத்துளிகளாய் உரு மாறவா???)
வலி சிறிதம் அறியாமல் உன் மூக்கில் சிறு துளையிட்டு எனையதில் குத்தவே உன் முகநகை கூடும்.
பின் மலரின் உள் சென்று தேன் மட்டும் எடுக்கையில் சற்றே வலித்தாலும் பொறுத்துக் கொள்வாயா??
(தேன் வாகையும் வாய் பேசுமா?
உன் விழிகளும் பொய் ஆகுமா??
பெண் இமைகளும் எழில் சேர்க்கவே மைத்துளிகளாய் உரு மாறவா???)
திரள்மேகம் திறந்ததும் மழைச்சாறல் பொழிந்ததும் திறக்காத கதவும் திறந்ததோ?
சறுக்காத ஈரங்கள் ஔிக்காக ஏங்கும், எரிகின்ற மரங்கள் மழைக்காக ஏங்கும்..
மழைாய் ஔியாய் கலந்தே நீ வருவாயா?
கடிகார முட்கள் ஒலிக்கும ஓசைபோல் முத்தங்கள் தருவாயா??
(தேன் வாகையும் வாய் பேசுமா?
உன் விழிகளும் பொய் ஆகுமா?
பெண் இமைகளும் எழில் சேர்க்கவே மைத்துளிகளாய் உரு மாறவா???)
-யான்

எழுதியவர் : யான் (16-Jul-17, 10:39 am)
சேர்த்தது : Yaan
பார்வை : 83

மேலே