வெள்ளைமனம்
வெள்ளை மனம்
வெள்ளைமனம் கொண்டதாலே
------ வெண்புறாவே தூதானாய் !
கொள்ளைகொண்டாய் மனத்தினையும்
------- கோபுரமாய் நின்றிட்டாய் !
கள்ளமில்லை உன்னிடமே
------- கயவர்கள் கைப்படாத
கண்ணகியின் இனமும்தான் !
------- கண்ணியமும் நீதானே !
தூய்மையுமே ஏங்கிநிற்கும்
------ தூயவளாம் உனைத்தேடி .
வாய்மையுமே உனைச்சேரும்
------ வளமான வெள்ளைமனம் .