கண்ணீரே என் கண்ணீரே

இதயம் விட்டு
கண்கள் வழி
வெளியே சென்றாய்
கண்ணீரே என் கண்ணீரே ....!!

கனவை விட்டு
நிஜத்தை தேடி
ஓடி மறைந்தாய்
கண்ணீரே என் கண்ணீரே ..!!

இன்னும் என்னை
எவ்வாறு கொல்வாய்
அன்பே ??
பிணமாக கிடந்தாலும்
உன் மௌனத்தால்
என்னை கொய்தாய்
இன்றே ..!!

நிழலாய் இருட்டில்
நானும் வாழ்ந்தேன்,
நிலவு போல் நீயும்
வந்து மறைந்தாய்..!!

துடிக்க மறுக்கும்
இதய நாளங்களில்
அமர்ந்து ,
இரத்தத்தை இன்னும்
உறைய செய்தாய்..!!

மலராய் தாங்கினேன்
பெண்ணே
என்னில் இருந்து எவனோ
உன்னை பரிதானே ...!!

வான் முகிலாய் காத்தேன்
கண்ணே
அந்த காற்று பட்டு
என்னை விட்டு
பிரிந்தாயே...!!!

பைத்தியம் போல
நானும் கத்த....
நீயோ அவனுடன்
இன்பத்தில் சுத்த !!

கருவிழியாய் உன்னை
என்னில் காக்க ,
என் விழியே என்
கண்களை தாக்க,...
குருடனாக்கி திரியவிட்டாயே...!!!

இதயம் விட்டு
கண்கள் வழி
வெளியே சென்றாய்
கண்ணீரே என் கண்ணீரே ....

உன் சுகத்திற்காக
என்னை சுடுகாடு
அனுப்பிய உன்னை
வாழ்த்துவேன்
மரணத்திலும்
என்றும் ...என்றென்றும் ...
ஜீவன்

எழுதியவர் : Jeevan (23-Jul-17, 6:08 pm)
சேர்த்தது : கிறுக்கன்
பார்வை : 274

மேலே