கொஞ்சம் காதல் கொஞ்சம் மோதல்-காதல் துளிகள்-05

.......கொஞ்சம் காதல்
கொஞ்சம் மோதல்.....

காதல் துளிகள் : 05

21.என் கொஞ்சிடும் மொழிகள்
கண்டு கெஞ்சிடும் அவன்
விழிகள் எனக்குள்
புது வானிலை மாற்றங்களை
அறிமுகப்படுத்திச் செல்கிறது...

22.அவனும் நானும் இணைந்து
எழுதிய புதுக்கவிதைகளுக்காக
பிரமிட்டுக்கள் விண்ணப்பம் கோரி
என் வாசற் கதவுகளைத் தட்டிச்
செல்கின்றன...

23.வானம் முழுதிலும் அவனுக்காய்
நான் வரைந்த கடிதங்களை
மேகங்கள் மழைத்துளிகளில் பதிவு
செய்து அவனிடம் கொண்டு
சேர்க்கின்றன...

24.என் கன்னங்கள் இரண்டும்
செவ்வானமாய் சிவக்கும் வேளைகளில்
அவன் உதடுகளில் உதட்டுச் சாயம்
வந்து ஒட்டிக் கொள்கிறது...

25.என் இருதய வாசலில் அடம்
பிடிக்கும் அவன் விழிகளை
என் இமைகள் கள்ளமாய்
படம் பிடித்துக் கொள்கின்றன...

எழுதியவர் : அன்புடன் சகி (24-Jul-17, 4:17 am)
பார்வை : 420

மேலே