கைவசம் உள்ள கவிதைகளை மட்டும் சொல்லவா

கைவசம் உள்ள கவிதைகளை
மட்டும் சொல்லவா !
இதயவசம் உள்ள
எல்லா கவிதைகளையும் சொல்லவா !

காதல்கவி அத்தனையும்
உன்னிடமே கதைத்து கொட்டவா !

காலை விடியலில் நீ கண்மலர்வாயே
அதையும் கூட
கவிதையாய் எழுதவா !

என் திறம் வியக்கும் கவிதைக்கெல்லாம்
நீயே சொந்தமடி !

என் மனம் முழுதும் நிரம்பி வழியுதடி
உன் எண்ணமடி !

என் கவிதைக்கனல் யாவும் உன் இதயம்
சுடுவதே வாடிக்கையாகி போனதடி !

ஒரு முறை உன்பார்வை மட்டும் வீசி விட்டு
போயடி !

நான் வாழ்வதற்கும் வீழ்வதற்கும் உந்தன் மடி
மட்டுமே போதுமடி !

எழுதியவர் : முபா (24-Jul-17, 3:51 pm)
பார்வை : 234

மேலே