உண்மைதானே
ஆடலும் பாடலும்
ராகமும் தாளமும்
வானமும் மேகமும்
சூரியனும் வெம்மையும்
நிலவும் குளுமையும்
இனைந்திருந்தால்
அழகென்பதை
அறிந்தவன் தான்
அனுமதித்தானோ?
இனைந்திருக்க!
உனக்கென நானும்
எனக்கென நீயும்
என்பதை எப்படி
தீர்மானித்தான்?
புரியாத புதிராய்
இருந்தாலும் அவன்
கணிப்பு எதிலும்
தவறவில்லை என்பதே
நிதர்சன உண்மை
உண்மைதானே
நான் சொல்வது?
#sof_sekar