என் வலிக்கு நீதானடி ஆறுதல் 555
![](https://eluthu.com/images/loading.gif)
என்னுயிரே...
நித்தம் என் இரவுகளில்
பற்றிக்கொள்ளும் உன் நினைவுகள்...
உன் நினைவுகளை தவிர்த்து
தூக்கத்தை தொடரலாமென நினைத்தால்...
முடியவில்லை என்னால்...
உன் மீதான காதலை
அதிகப்படுத்தும்...
ஒவ்வொரு நாட்களுக்கும்
என் வலி தெரியும்...
உனக்கு தெரியாமல் இருக்கலாம்
என் இதயம் உருகுவது...
எத்தனை நாட்கள் நீயும் என்னுடன்
பொய்யாகவே சிரித்து பேசிருக்கிறாய்...
உன் சிரிப்பிற்கு பின்
மறைந்து கிடைக்கும்...
என் மரணத்தை பற்றி தெரியாமல்
நானும் சிரித்தேன் உன்னுடன்...
என்னவளே நீ கொடுக்கும்
வலிகளுக்கு நீதானடி ஆறுதல்...
வாழ்கிறேன் நானும்
உன் மடிசேர்வேன் என்று.....