ஹைக்கூ 10 கவிதைகள்

சீலையில்
ஜவுளிக்கடை பொம்மை
மறந்தப் பெண்கள்!

குடையில்
மழை ஏழை ~வீடூ
கண்ணீர்!

காற்றில்
ஒருக் கைகுட்டை
தாவனி!

இயற்கை
காத்தாடிச் செயற்கைப் பட்டம்
காற்றில் நெகிழி!

பாவ மூட்டை
அழுக்குத் துணி
கழுதைத் தோளில்!

வாய்த் திறக்க
வயிறு நிறப்ப மண்ணும்
மழையும்!

வாசம் தந்து
சுவாசம் நின்றது
பூஜை அறை!

முள்களும்
தோல்விக் கண்டதுப் பெண்களிடம்
ரோஜாப் பூ!

தாய்ப்பால்
குடித்துத் தாயைக் கொன்றான்
மரங்கள்!

முகப்பு மாடம்
தேயாத முழு நிலவு
என்னவள்!

அன்புடன்
~ரா-ஸ்ரீராம் ரவிக்குமார்

எழுதியவர் : ரா-ஸ்ரீராம் ரவிக்குமார் (31-Jul-17, 1:18 am)
பார்வை : 748

மேலே