விடியலை தேடும் பறவை

கனவுதான் வாழ்க்கையம்மா கலைந்துதான் போனதம்மா
சொந்தங்கள் கூடி நின்று குதுகலம் கொண்ட நாட்கள்
அண்ணணும் தங்கையென்று ஆறுபேர் கூடி நின்றோம்
அவரவர் துணையைத்தேடி ஆளுக்கோர் தேசம் சென்றோம்
ஊனமாய் போன பறவை உறக்கமே இல்லா இரவாய் போன வாழ்வை
எண்ணி விடியலை தேடும் பறவையாய் ஆனதிங்கே

அஸ்லா அலி

எழுதியவர் : aslaaali (1-Aug-17, 2:01 pm)
சேர்த்தது : அஸ்லா அலி
பார்வை : 352

மேலே